இடுகைகள்

இந்தியா மற்றும் பிரேசிலுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கும் நடவடிக்கை தீவிரம் - ரஷியா

படம்
  இந்தியா மற்றும் பிரேசிலுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கும் நடவடிக்கை தீவிரம் - ரஷியா சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா இணைந்த பிரிக்ஸ் அமைப்பின் கூட்டம் ஆன்லைன் மூலம் நடந்தது.

மொசாம்பிக் நாட்டில் 50 பேரை ஐஎஸ் பயங்கரவாதிகள் தலைதுண்டித்து கொலை

படம்
  மொசாம்பிக் நாட்டில் 50 பேரை ஐஎஸ் பயங்கரவாதிகள் தலைதுண்டித்து கொலை கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஐ.ஸ். பயங்கர அமைப்பு, அதன் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம், அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் ஐஎஸ், அல் ஷபாப் பயங்கரவாதிகள் வைத்துள்ளனர்.

நகோர்னோ-கராபாத் மாகாணத்தை முன்வைத்து நடந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வி

படம்
நகோர்னோ-கராபாத் மாகாணத்தை முன்வைத்து நடந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வி அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கள் ஆகும். 1994-ம் ஆண்டு நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையாமாக வைத்து இரு நாடுகளும் இடையே நடந்த போரில் மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.

பிரேசிலில் சீன தடுப்பூசி பரிசோதனையில் உட்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக தகவல்

படம்
  பிரேசிலில் சீன தடுப்பூசி பரிசோதனையில் உட்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக தகவல் உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 3-வது இடத்தில் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் 57 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா உயிரிழப்புகள் பட்டியலில் உலக அளவில் இரண்டாவது அதிக உயிரிழப்பையும் பிரேசில் சந்தித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு 1 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் இந்திய வம்சாவளியினர் 20 பேர் இடம் பிடிப்பு

படம்
  ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் இந்திய வம்சாவளியினர் 20 பேர் இடம் பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பெரும்பான்மையான வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற ஜனவரி 20-ந் தேதி பதவியேற்கிறார். தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை ஜோ பைடனுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

துருக்கியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

படம்
  துருக்கியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடவில்லை. கொரோனா வைரஸ் தொடர்பான உண்மையான புள்ளிவிவரத்தை குறைத்து காட்டுவதாக குற்றம்சுமத்தப்படும் நாடுகளில் துருக்கியும் ஒன்று.

எனது பெயர் எனது அடையாளம், அதனால் பெயரை மாற்றப் போவதில்லை - செலின் கவுண்டர் விளக்கம்

படம்
  எனது பெயர் எனது அடையாளம், அதனால் பெயரை மாற்றப் போவதில்லை - செலின் கவுண்டர் விளக்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் டாக்டர் செலின் கவுண்டர் இடம் பிடித்துள்ளார். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதும், செலின் தனது பெயருக்குப் பின்னால் கவுண்டர் என்ற அடையாளத்தை ஏன் பயன்படுத்துகிறார் என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்தனர்.

அமீரக ராணுவத்திற்கு “50 நவீன எப் 35“ ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

படம்
  அமீரக ராணுவத்திற்கு “50 நவீன எப் 35“ ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அமீரகம்-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளுக்கு இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. வளைகுடா போருக்கு பின் அமெரிக்கா எப் 16 போர் விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்தது. தற்போது எப் 35 போர் விமானங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்வது குறித்து இரு நாடுகளுக்கு இடையே நேர்மறையான பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

ஹாங்காங் சட்டசபையில் இருந்து ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா

படம்
  ஹாங்காங் சட்டசபையில் இருந்து ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்டதில் இருந்தே ஜனநாயகத்திற்கு ஆதரவான அரசியல் கட்சியினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், பல்வேறு சமூக ஆர்வலர்களும், சுதந்திரத்திற்கான ஆதரவாளர்களும் சீன அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாங்காங்கின் சட்டசபை உள்விவகாரங்களிலும் சீனா நேரடியாக தலையிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க செய்யும் இயற்கை வழி

படம்
  குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க செய்யும் இயற்கை வழி குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க சித்தர்கள் காட்டியுள்ள இயற்கை வழிமுறைதான் கோமதி சக்கரம். இதை குழந்தைகள் தூங்கும் சமயத்தில் ஒரு மணி நேரம் நெற்றிப்பொட்டில் மத்தியில் வைத்தவாறு இருக்கவேண்டும். இதனால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும்.