இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராவிட்டாலும் ஏற்றுக் கொள்வோம்; ராஜேந்திர பாலாஜி

படம்
  ரஜினிகாந்த் அரசியலுக்கு வராவிட்டாலும் ஏற்றுக் கொள்வோம்; ராஜேந்திர பாலாஜி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பார் என்றும், உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதில் இருந்து பின்வாங்குவார் என்றும் இருவேறு கருத்துக்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அவர் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை என்றும் அவர் தனது உடல்நிலையை கணக்கில் கொண்டு அரசியலுக்கு வரமாட்டார் என்றே பலரும் கூறி வருகின்றனர்.

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றிபெற 111 ரன்கள் இலக்காக நிர்ணயம்

படம்
  டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றிபெற 111 ரன்கள் இலக்காக நிர்ணயம் துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் போல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இந்த வார எவிக்சனில் இருந்து தப்பிய 5 பேர்!

படம்
  இந்த வார எவிக்சனில் இருந்து தப்பிய 5 பேர்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே நாமினேஷன் செய்யப்பட்ட 11 பேர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார். இந்த வாரம் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேர் நாமினேசன் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 5 பேருக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

லட்சுமி பாம் திரைப்படத்தின் புதிய டைட்டில் அறிவிப்பு!

படம்
  லட்சுமி பாம் திரைப்படத்தின் புதிய டைட்டில் அறிவிப்பு! ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகிய 'லட்சுமி பாம்' என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீசுக்கு தயாரான நிலையில், இந்த படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியது.

ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆர்மேனியா பிரதமர் மனைவி அன்னா ஹகோபியான்

படம்
  ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆர்மேனியா பிரதமர் மனைவி அன்னா ஹகோபியான் நாகோர்னா-காராபாக் மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பதில் அசர்பைஜான், ஆர்மேனியா ஆகிய நாடுகள் இடையே 19 வருடங்களாக மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மோதல் மீண்டும் இரு நாடுகள் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இருதரப்பு ராணுவ மோதலில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதில் அப்பாவி பொதுமக்களும் அடங்குவர்.

சிறப்பாக ஆளப்படும் மாநிலங்கள் குறித்த பட்டியல் வெளியீடு

படம்
  சிறப்பாக ஆளப்படும் மாநிலங்கள் குறித்த பட்டியல் வெளியீடு இந்தியாவில் சிறப்பாக ஆட்சி செய்யப்படும் மாநிலங்கள் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான பொது விவகாரங்கள் மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்? - இந்திய ஜோதிடர் கணிப்பு

படம்
  அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்? - இந்திய ஜோதிடர் கணிப்பு அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் நடைபெறும் முன்பே இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் டோனியே கேப்டனாக நீடித்தால் ஆச்சரியமில்லை - கவுதம் கம்பீர்

படம்
  2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் டோனியே கேப்டனாக நீடித்தால் ஆச்சரியமில்லை - கவுதம் கம்பீர் 13-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் வரலாற்றிலே முதன் முறையாக இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறவுள்ளது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக வதந்திகள் பரவின.

உடற்பயிற்சியை உன்னதமாக்க உதவும் அறிவுரைகள்

படம்
உடற்பயிற்சியை உன்னதமாக்க உதவும் அறிவுரைகள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி, மெது ஓட்டம், வேக ஓட்டம், பளுதூக்குதல் உள்பட பல விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 30 நிமிடங்கள் அவர்களுக்கான உடற்பயிற்சிகளை, மிதமான வேகத்தில், வாரம் 4 முதல் 5 நாட்கள் செய்தாலே போதுமானது. 25 வயதுக்கு குறைந்தவர்கள், 25 முதல் 40 வயது வரையிலான வயதுடையோர் 60 நிமிடங்கள் தினமும் அவர்களின் வயதுக்குப் பொருத்தமாக உடற்பயிற்சிகளை செய்யலாம்.

குழந்தைகளுக்கான தரமான தகவல்கள் மற்றும் செய்திகளை தரக்கூடிய செயலிகள்

படம்
  குழந்தைகளுக்கான தரமான தகவல்கள் மற்றும் செய்திகளை தரக்கூடிய செயலிகள் யூ-டியூப் கிட்ஸ் (youtube Kids): இந்தச் செயலியின் சிறப்பம்சமே இதில் உள்ள பேரன்டல் கன்ட்ரோல்தான், குழந்தைகள் எதைப் பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை இதில் தீர்மானிக்க முடியும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னும் குழந்தைகள் காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் செயலி தானாகவே லாக் ஆகிவிடும்.

வீட்டுக்கடன் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

படம்
  வீட்டுக்கடன் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் வீட்டுக்கடன் வாங்குவதற்கு நம்மிடம் ஒரு அடிப்படைத்தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவீத தொகை நம்மிடம் இருக்க வேண்டும். இதை ‘டவுன் பேமென்ட்’ என்று சொல்லுவார்கள். உதாரணத்துக்கு ரூ.50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 10 லட்ச ரூபாயாவது நீங்கள் செலுத்தும் முன்பணமாக இருக்க வேண்டும். வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டுக்கடன்தான் வாங்குகிறார்கள்.

35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்

படம்
  35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் பெண்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். ஆனால் நல்ல நிலைக்கு வருவதற்குள், பெண்களுக்கு குறைந்தது 35 வயதாகிவிடுகிறது. இவ்வாறு 35 வயதானப் பின்னர், சிலருக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதோடு, கர்ப்பமான பின்பு சிக்கல்களை சந்தித்து, பின் அது குழந்தை அல்லது தாயின் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவில் இருக்கிறது.

டி 20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை; 1001 சிக்ஸர்கள் அடித்தார் கிறிஸ்கெயில்

படம்
  டி 20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை; 1001 சிக்ஸர்கள் அடித்தார் கிறிஸ்கெயில் வரலாற்று சாதனை... டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் சிக்சர்கள் சாதனையை உடைப்பது மிகமிகக் கடினம் என்பதற்கு ஏற்ப டி20 கிரிக்கெட்டில் இன்று தனது 1000-வது சிக்சரை அடித்து அதைக் கடந்து 1001 சிக்சர்களை அடித்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.

துருக்கியில் நிலநடுக்கம்; நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன

படம்
  துருக்கியில் நிலநடுக்கம்; நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன பலத்த நிலநடுக்கம்... துருக்கி நாட்டில் கிரீஸின் தோடிகேனெஸ் தீவில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0-ஆக பதிவாகியுள்ளது.

99 ரன்களில் அவுட் ஆனது துரதிர்ஷ்டவசமானது; கிறிஸ் கெயில் வருத்தம்

படம்
  99 ரன்களில் அவுட் ஆனது துரதிர்ஷ்டவசமானது; கிறிஸ் கெயில் வருத்தம் 99 ரன்களில் அவுட் ஆனது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இறுதி வரை கிரீஸில் நின்று விளையாடியது மகிழ்ச்சி தான் என்று கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறதா சன் பிக்ஸர்ஸ்?

படம்
  ரஜினியின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறதா சன் பிக்ஸர்ஸ்? அடுத்ததாகவும் சன் பிக்ஸர்ஸ் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5,000 வழங்க வேண்டும்; முத்தரசன் பேட்டி

படம்
  ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5,000 வழங்க வேண்டும்; முத்தரசன் பேட்டி வத்திராயிருப்பு என்ற பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி எழுதிய "எனது அரசியல் பயணம்" என்ற நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.

பொடுகு பிரச்சனையை போக்கும் இஞ்சி சாறு!

படம்
  பொடுகு பிரச்சனையை போக்கும் இஞ்சி சாறு! பொடுகு என்பது ஆண் மற்றும் பெண் போன்ற இருபாலினத்தினருக்கும் இருக்கிறது. இந்த பிரச்னையை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருளை கொண்டே சரி செய்யலாம். அதாவது இஞ்சி தலையில் இருக்கும் பொடுகையும் அரிப்பு பிரச்சனையையும் போக்க வல்லது. மேலும் பீட்ரூட் கூந்தலுக்கு பொலிவான தோற்றத்தையும் பளபளப்பையும் கொடுப்பதோடு பொடுகால் பாதிக்கப்பட்ட கூந்தலுக்கு வலுவை கொடுக்க உதவுகிறது. இந்த பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி

படம்
நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

25 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை; மத்திய மந்திரி அறிவிப்பு

படம்
  25 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை; மத்திய மந்திரி அறிவிப்பு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மழைக்காலத்தில் பாதுகாப்புக்காகவே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது; அமைச்சர் தங்கமணி தகவல்

படம்
  மழைக்காலத்தில் பாதுகாப்புக்காகவே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது; அமைச்சர் தங்கமணி தகவல் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியின் போது கட்டிட சாரம் இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் தங்கமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

தமிழகத்தில் புதிதாக 2, 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

படம்
தமிழகத்தில் புதிதாக 2, 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 2 ஆயிரத்து 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 1 முதல் சிலிண்டர் முன்பதிவு செய்ய நாடு முழுவதும் ஒரே தொலைபேசி எண் அறிமுகம்

படம்
  நவம்பர் 1 முதல் சிலிண்டர் முன்பதிவு செய்ய நாடு முழுவதும் ஒரே தொலைபேசி எண் அறிமுகம் சிலிண்டர் முன்பதிவு செய்ய நாடு முழுவதும் ஒரே தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

படம்
  பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் நேற்று அபு தாபியில் நடைபெற்றபோது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் மந்தீப் சிங், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மந்தீப் சிங் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து கேஎல் ராகுல் உடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தனர்.

4 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் மலபார் கடற்பயிற்சி வருகிற 3-ந்தேதி முதல் தொடக்கம்

படம்
  4 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் மலபார் கடற்பயிற்சி வருகிற 3-ந்தேதி முதல் தொடக்கம் இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் பங்கேற்கும் மலபார் வரிசை கடற்பயிற்சி கடந்த 1992-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜப்பானும் பங்கேற்று வருகிறது. இந்நிலையில், 24-வது மலபார் கடற்பயிற்சிகள் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெறுகிறது. இந்த மலபார் பயிற்சியில் 4-வது நாடாக ஆஸ்திரேலியாவும் பங்கேற்க இந்தியா அழைப்பு விடுத்தது. அதன்படி, ஆஸ்திரேலியாவின் ராயல் கடற்படையும் இந்த ஆண்டு மலபார் பயிற்சியில் இணைகிறது.

வீட்டில் இருந்த பட்டாசு வெடித்து சிதறியதால் 2 பேர் பலி

படம்
  வீட்டில் இருந்த பட்டாசு வெடித்து சிதறியதால் 2 பேர் பலி வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து சிதறி இருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிக தொகை செலவிடப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல்

படம்
  அதிக தொகை செலவிடப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே அதிகம்... அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த தேர்தலுக்கு செலவிட்ட தொகை இதுவரையிலான அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே அதிகம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

மழை நீரை சுத்தப்படுத்தி கோவில் குளங்களில் சேமிக்க புதிய முறை அறிமுகம்

படம்
மழை நீரை சுத்தப்படுத்தி கோவில் குளங்களில் சேமிக்க புதிய முறை அறிமுகம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் மழை நீரை சுத்தப்படுத்தி கோவில் குளங்களில் சேமிப்பதற்காக சென்னை மாநகராட்சி புதிய முறை ஒன்றை நடைமுறைபடுத்தியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்யும் அவகாசம் நீட்டிப்பு

படம்
  ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்யும் அவகாசம் நீட்டிப்பு கால அவகாசம் நீட்டிப்பு... பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏா் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான அவகாசத்தை டிசம்பா் மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் அரசாணை

படம்
  அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் அரசாணை சென்னை: அரசாணை பிறப்பிப்பு... மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தாா்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

படம்
  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இடியுடன் கூடிய மிதமான மழை... வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.30) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் ஆசிட் வீசிய காதலி

படம்
  காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் ஆசிட் வீசிய காதலி திரிபுராவில் உள்ள ஒரு கிராமத்தில் காதலன் திருமணம் செய்ய சம்மதிக்காததால் அவரை பழிதீர்க்க காதலி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதிப்பு

படம்
  ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதிப்பு இந்தியாவில் சர்வதேச விமான பயணங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் முதல் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு சில நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னையில் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும்

படம்
  சென்னையில் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஜோ பைடன் இன்று தனது வாக்கை பதிவு செய்தார்!

படம்
  அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஜோ பைடன் இன்று தனது வாக்கை பதிவு செய்தார்! அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் இன்று தனது வாக்கை பதிவு செய்தார்.

அமைச்சர் துரைக்கண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

படம்
  அமைச்சர் துரைக்கண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, திடீர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 26 ஆயிரத்து 356 பேர் சிகிச்சை

படம்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 26 ஆயிரத்து 356 பேர் சிகிச்சை தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று புதிதாக 2 ஆயிரத்து 516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 16 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.

பெட்ரோல் ஒரு லிட்டர் 84.14 ரூபாய்க்கு விற்பனை

படம்
  பெட்ரோல் ஒரு லிட்டர் 84.14 ரூபாய்க்கு விற்பனை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு

படம்
  விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 16 ஆயிரத்து 751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மாற்று மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

சுறா மீன்களின் துடுப்புகளை துபாய்க்கு கடத்திச்செல்ல முயன்ற 2 பேர் கைது

படம்
  சுறா மீன்களின் துடுப்புகளை துபாய்க்கு கடத்திச்செல்ல முயன்ற 2 பேர் கைது சென்னையிலிருந்து துபாய்க்கு செல்ல இருந்த சிறப்பு விமானத்தில் சுறா மீன்களின் துடுப்புகளை கடத்திச்செல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்; இ.பி.ஸ் - ஓ.பி.ஸ் அறிக்கை

படம்
  சென்னையில் 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்; இ.பி.ஸ் - ஓ.பி.ஸ் அறிக்கை தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஆளும் கட்சியான அ.தி.மு.க. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

விஜய்யின் 65-வது படத்தை பேரரசு இயக்க வாய்ப்பு

படம்
  விஜய்யின் 65-வது படத்தை பேரரசு இயக்க வாய்ப்பு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு நேரடியாக தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். இதனையடுத்து அவர் நடிக்க இருக்கும் அடுத்தபடத்தை இயக்கும் இயக்குனர் குறித்து அவ்வப்போது தகவல் வெளியாகி வருகின்றன.

கொரோனாவிலிருந்து நடிகர் பிரிதிவிராஜ் குணமடைந்தார்!

படம்
  கொரோனாவிலிருந்து நடிகர் பிரிதிவிராஜ் குணமடைந்தார்! நடிகர் பிருதிவிராஜ் சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் நடந்த ஜனகனமன என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றபோது கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இது மலையாள பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.