இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா மற்றும் பிரேசிலுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கும் நடவடிக்கை தீவிரம் - ரஷியா

படம்
  இந்தியா மற்றும் பிரேசிலுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கும் நடவடிக்கை தீவிரம் - ரஷியா சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா இணைந்த பிரிக்ஸ் அமைப்பின் கூட்டம் ஆன்லைன் மூலம் நடந்தது.

மொசாம்பிக் நாட்டில் 50 பேரை ஐஎஸ் பயங்கரவாதிகள் தலைதுண்டித்து கொலை

படம்
  மொசாம்பிக் நாட்டில் 50 பேரை ஐஎஸ் பயங்கரவாதிகள் தலைதுண்டித்து கொலை கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஐ.ஸ். பயங்கர அமைப்பு, அதன் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம், அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் ஐஎஸ், அல் ஷபாப் பயங்கரவாதிகள் வைத்துள்ளனர்.

நகோர்னோ-கராபாத் மாகாணத்தை முன்வைத்து நடந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வி

படம்
நகோர்னோ-கராபாத் மாகாணத்தை முன்வைத்து நடந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வி அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கள் ஆகும். 1994-ம் ஆண்டு நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையாமாக வைத்து இரு நாடுகளும் இடையே நடந்த போரில் மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.

பிரேசிலில் சீன தடுப்பூசி பரிசோதனையில் உட்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக தகவல்

படம்
  பிரேசிலில் சீன தடுப்பூசி பரிசோதனையில் உட்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக தகவல் உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 3-வது இடத்தில் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் 57 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா உயிரிழப்புகள் பட்டியலில் உலக அளவில் இரண்டாவது அதிக உயிரிழப்பையும் பிரேசில் சந்தித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு 1 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் இந்திய வம்சாவளியினர் 20 பேர் இடம் பிடிப்பு

படம்
  ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் இந்திய வம்சாவளியினர் 20 பேர் இடம் பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பெரும்பான்மையான வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற ஜனவரி 20-ந் தேதி பதவியேற்கிறார். தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை ஜோ பைடனுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

துருக்கியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

படம்
  துருக்கியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடவில்லை. கொரோனா வைரஸ் தொடர்பான உண்மையான புள்ளிவிவரத்தை குறைத்து காட்டுவதாக குற்றம்சுமத்தப்படும் நாடுகளில் துருக்கியும் ஒன்று.

எனது பெயர் எனது அடையாளம், அதனால் பெயரை மாற்றப் போவதில்லை - செலின் கவுண்டர் விளக்கம்

படம்
  எனது பெயர் எனது அடையாளம், அதனால் பெயரை மாற்றப் போவதில்லை - செலின் கவுண்டர் விளக்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் டாக்டர் செலின் கவுண்டர் இடம் பிடித்துள்ளார். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதும், செலின் தனது பெயருக்குப் பின்னால் கவுண்டர் என்ற அடையாளத்தை ஏன் பயன்படுத்துகிறார் என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்தனர்.

அமீரக ராணுவத்திற்கு “50 நவீன எப் 35“ ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

படம்
  அமீரக ராணுவத்திற்கு “50 நவீன எப் 35“ ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அமீரகம்-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளுக்கு இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. வளைகுடா போருக்கு பின் அமெரிக்கா எப் 16 போர் விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்தது. தற்போது எப் 35 போர் விமானங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்வது குறித்து இரு நாடுகளுக்கு இடையே நேர்மறையான பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

ஹாங்காங் சட்டசபையில் இருந்து ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா

படம்
  ஹாங்காங் சட்டசபையில் இருந்து ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்டதில் இருந்தே ஜனநாயகத்திற்கு ஆதரவான அரசியல் கட்சியினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், பல்வேறு சமூக ஆர்வலர்களும், சுதந்திரத்திற்கான ஆதரவாளர்களும் சீன அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாங்காங்கின் சட்டசபை உள்விவகாரங்களிலும் சீனா நேரடியாக தலையிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க செய்யும் இயற்கை வழி

படம்
  குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க செய்யும் இயற்கை வழி குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க சித்தர்கள் காட்டியுள்ள இயற்கை வழிமுறைதான் கோமதி சக்கரம். இதை குழந்தைகள் தூங்கும் சமயத்தில் ஒரு மணி நேரம் நெற்றிப்பொட்டில் மத்தியில் வைத்தவாறு இருக்கவேண்டும். இதனால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் விழாவில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவுள்ளாரா ?

படம்
  அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் விழாவில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவுள்ளாரா ? அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20, 2021 ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறின.

ஐ.பி.எல். கோப்பையை ஐந்தாவது முறையாக தன் வசமாக்கியது மும்பை

படம்
  ஐ.பி.எல். கோப்பையை ஐந்தாவது முறையாக தன் வசமாக்கியது மும்பை மும்பை இந்தியன் அணி அபார வெற்றி... 2020-ம் ஆண்டுக்கான 13-வது ஐபிஎல் டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை 5-வது முறையாகவும், தொடர்ந்து 2-வது முறையாகும் கைப்பற்றி நடப்பு சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.

பீகார் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது பாஜக கூட்டணி

படம்
  பீகார் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது பாஜக கூட்டணி பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வருவதால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

பீகார் தேர்தலில் சுமார் 75 தொகுதிகளில் ஜேடியு கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிப்பு

படம்
  பீகார் தேர்தலில் சுமார் 75 தொகுதிகளில் ஜேடியு கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிப்பு பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக-ஜேடியு கூட்டணிக்கு எதிராகவே இருந்தன. அதன்படியே நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதும் பாஜக-ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணிக்கும் இடையிலான இடைவெளி குறைவாகவே இருந்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான போட்டியை நேரில் கண்டு களிக்க ரசிகர்களுக்கு அனுமதி

படம்
  இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான போட்டியை நேரில் கண்டு களிக்க ரசிகர்களுக்கு அனுமதி இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான போட்டி தொடர் வருகிற 27-ந் தேதி தொடங்கி ஜனவரி 19-ந் தேதி வரை நடக்கிறது. இரு அணிகள் இடையே 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் அரங்கேறுகின்றன. இதற்காக இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இன்று புறப்பட்டு ஆஸ்திரேலியா செல்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட்கோலி ஆடாதது லேசான ஏமாற்றம் அளிக்கிறது - ஸ்டீவ் வாக்

படம்
  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட்கோலி ஆடாதது லேசான ஏமாற்றம் அளிக்கிறது - ஸ்டீவ் வாக் இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரி முதல் வாரத்தில் குழந்தை பிறக்க உள்ளது.

ஐபிஎல் தொடரில் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய கேஎல் ராகுல்

படம்
  ஐபிஎல் தொடரில் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய கேஎல் ராகுல் ஐபிஎல் 13-வது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் அமீரகத்தில் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடைபெற்றது. இந்நிலையில் ஐபிஎல் 13-வது சீசன் தொடர்ந்து நடைபெற்ற 60 ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. இந்த லீக் ஆட்டங்களில் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும்.

தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகன் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவு

படம்
  தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகன் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவு விசாரணை உத்தரவு... கேரள மாநிலம் வயநாட்டில் அதிரடிப்படை போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தை சேர்ந்த வேல்முருகன் கொல்லப்பட்டது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

படப்பிடிப்பில் வேகம் காட்டும் சிலம்பரசன்; கோலிவுட்வாசிகள் வியப்பு

படம்
படப்பிடிப்பில் வேகம் காட்டும் சிலம்பரசன்; கோலிவுட்வாசிகள் வியப்பு   ஈஸ்வரன் படத்திற்கு கிடுகிடுவென்று தன் பணிகளை முடித்து அடுத்த படமான மாநாட்டில் பிஸி ஆகி விட்டார் நடிகர் சிலம்பரசன். இவரது இந்த சுறுசுறுப்பை கண்டு கோலிவுட்டே ஆச்சரியத்தில் வாய் பிளந்து நிற்கிறது.

கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்கிறது மாதுளை பழத்தின் சாறு

படம்
  கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்கிறது மாதுளை பழத்தின் சாறு மாதுளை பழத்தின் சாறு மற்றும் கிரீன் டீ ஆகியவை கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குளிர்காலத்தில் நம் தோல் மற்றும் கூந்தலை பாதுகாக்கும் வழிகள்

படம்
  குளிர்காலத்தில் நம் தோல் மற்றும் கூந்தலை பாதுகாக்கும் வழிகள் குளிர்காலத்தில் நம் தோல் மற்றும் கூந்தல் ஆகியவற்றைப் பாதுகாக்க சில முயற்சிகளை நாம் செய்யவேண்டியுள்ளது. அதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொது முடக்கத்தை தவிர்ப்பதற்காக கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

படம்
  பொது முடக்கத்தை தவிர்ப்பதற்காக கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு கடும் கட்டுப்பாடுகள்...பீல் பகுதி மாகாணத்தின் கொவிட்-19 வழிகாட்டுதல்களை மிகவும் மென்மையானது என்று நிராகரித்து, அதன் சொந்த வழிகாட்டுதல்களைக் கொண்டுவருகிறது.

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் திறக்கப்பட்டது

படம்
  வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் திறக்கப்பட்டது தமிழகத்தில் நேற்று முதல் உயிரியியல் பூங்காக்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்கா நேற்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். அதனால், நேற்று பூங்கா திறக்கப்படவில்லை. இன்று (புதன்கிழமை) அரசு அறிவித்தபடி, வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜோபைடன், கமலா ஹாரிசுக்கு கனடா துணை பிரதமர் வாழ்த்து

படம்
  தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜோபைடன், கமலா ஹாரிசுக்கு கனடா துணை பிரதமர் வாழ்த்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு கனடாவின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தன் வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் முதிர்ச்சி அடைந்த வீரர் - மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா

படம்
  சூர்யகுமார் முதிர்ச்சி அடைந்த வீரர் - மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா 13-வது ஐபிஎல் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. இதுகுறித்து அந்த அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வீரர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்ததாக தெரிவித்தார்.

ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

படம்
  ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு; போக்குவரத்து அமைச்சகம் தகவல்

படம்
  பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு; போக்குவரத்து அமைச்சகம் தகவல் கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள காரணத்தால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு குறித்து நாளை அறிவிக்கப்படும்; பள்ளி கல்வித்துறை அமைச்சர்

படம்
  பள்ளிகள் திறப்பு குறித்து நாளை அறிவிக்கப்படும்; பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளிகள் திறப்பு குறித்து நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

மழையுடனான கால நிலை தொடரும் என்று அறிவிப்பு

படம்
  மழையுடனான கால நிலை தொடரும் என்று அறிவிப்பு மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டி சொல்லை தட்டாதே... போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்!

படம்
  பாட்டி சொல்லை தட்டாதே... போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்குகள் சுவராஸ்யமாக இருக்கும். இன்று பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க், 'பாட்டி சொல்லை தட்டாதே'.

அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்; கமல்ஹாசன் டுவிட்டால் பரபரப்பு

படம்
  அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்; கமல்ஹாசன் டுவிட்டால் பரபரப்பு உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினர். அவருக்கு ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பிக்பாஸ் போட்டியாளர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் ஒரு அற்புதமான மனித நேயம் உள்ளவர்; ஆர்ஜே பாலாஜி

படம்
  ரஜினிகாந்த் ஒரு அற்புதமான மனித நேயம் உள்ளவர்; ஆர்ஜே பாலாஜி ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி தீபாவளி விருந்தாக ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை கடந்த சில நாட்களாக ஆர்ஜே பாலாஜி செய்து வருகிறார். இந்த நிலையில் 'மூக்குத்தி அம்மன்' புரோமோஷனின் ஒரு பகுதியாக இன்று டுவிட்டரில் அவர் ரசிகர்களுடன் உரையாடினார்.

விபிஎப் பிரச்சனைக்கு தற்காலிக முடிவு... முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா?

படம்
  விபிஎப் பிரச்சனைக்கு தற்காலிக முடிவு... முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா? விபிஎப் கட்டணத்தை தானே ஏற்றுக் கொள்வதாக க்யூப் அறிவித்துள்ள நிலையில் முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

தளபதி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக தகவல்!

படம்
  தளபதி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக தகவல்! தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் திடீரென தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தனது ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என்று விஜய் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

தங்கம் விலை இன்று 1,248 ரூபாய் குறைந்தது... ஒரு பவுன் 38, 128 ரூபாய்க்கு விற்பனை

படம்
  தங்கம் விலை இன்று 1,248 ரூபாய் குறைந்தது... ஒரு பவுன் 38, 128 ரூபாய்க்கு விற்பனை உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

பாலாஜி பெற்ற மிஸ்டர் இந்தியா பட்டம் காலாவதி ஆகி விட்டது; ஜோ மைக்கல்

படம்
  பாலாஜி பெற்ற மிஸ்டர் இந்தியா பட்டம் காலாவதி ஆகி விட்டது; ஜோ மைக்கல் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி, தான் மிஸ்டர் இந்தியா என்று டாஸ்க் ஒன்றில் கூறினார். மேலும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

பீகார் தேர்தலில் வலுவான முன்னிலையில் பாஜக கூட்டணி

படம்
  பீகார் தேர்தலில் வலுவான முன்னிலையில் பாஜக கூட்டணி பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டம் நிறைவு... ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்!

படம்
  பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டம் நிறைவு... ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்! கொரோனா தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது.

தீபாவளியை முன்னிட்டு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் - பிரதமர் மோடி அழைப்பு

படம்
  தீபாவளியை முன்னிட்டு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் - பிரதமர் மோடி அழைப்பு பிரதமர் மோடி நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ.614 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வைத்தார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் என்று கூறினார்.

யாருக்கு ஐ.பி.எல்., கோப்பை; இன்று பலப்பரீட்சை நடத்தும் மும்பை-டெல்லி அணிகள்

படம்
  யாருக்கு ஐ.பி.எல்., கோப்பை; இன்று பலப்பரீட்சை நடத்தும் மும்பை-டெல்லி அணிகள் யாருக்கு ஐ.பி.எல். கோப்பை என்பது இன்று இரவு தெரிந்து விடும்... ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று இரவு நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அதிபர் தேர்தலில் வென்ற ஜோபைடனுக்கு வாழ்த்து தெரிவிக்காத நாடுகள் கூறிய காரணம்

படம்
  அதிபர் தேர்தலில் வென்ற ஜோபைடனுக்கு வாழ்த்து தெரிவிக்காத நாடுகள் கூறிய காரணம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோபைடனுக்கு பல நாட்டின் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை.

கோழிப்பண்ணையில் வெங்காயம் பதுக்கல்... 483 டன் வெங்காய மூட்டைகள் பறிமுதல்!

படம்
  கோழிப்பண்ணையில் வெங்காயம் பதுக்கல்... 483 டன் வெங்காய மூட்டைகள் பறிமுதல்! பெரம்பலூர் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கிய 483 டன் வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டு லாரி மூலம் கூட்டுறவு அங்காடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உடலில் ஏற்படும் நலக்குறைவுகளை காட்டிக் கொடுக்கும் நகங்கள்

படம்
  உடலில் ஏற்படும் நலக்குறைவுகளை காட்டிக் கொடுக்கும் நகங்கள் நகங்கள் காட்டி கொடுத்து விடும்... பொதுவாக நமது உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது எப்படியாவது நமக்கு ஒருசில அறிகுறிகளின் மூலம் வெளிக்காட்டும்.