இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனடாவில் இதுவரை 54.40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

படம்
  கனடாவில் இதுவரை 54.40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை கனடாவில் இதுவரை 54.40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று தகவலக்ள் தெரிவிக்கின்றன.

சுப்ரீம் கோர்ட் விதித்த ரூ.1 அபராதம் செலுத்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சம்மதம்

படம்
  சுப்ரீம் கோர்ட் விதித்த ரூ.1 அபராதம் செலுத்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சம்மதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும், முந்தைய தலைமை நீதிபதிகளின் செயல்பாடு குறித்தும் டுவிட்டரில் விமர்சித்திருந்தார்.

சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்துகள் இயக்கம்

படம்
  சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்துகள் இயக்கம் என்னனென்ன விதிமுறை என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தனி விமானத்தில் கொச்சினுக்கு பறந்த நயன்தாரா- விக்னேஷ்சிவன் ஜோடி

படம்
  தனி விமானத்தில் கொச்சினுக்கு பறந்த நயன்தாரா- விக்னேஷ்சிவன் ஜோடி ஓணம் பண்டிகையை கொண்டாட தனி விமானத்தில் கொச்சினுக்கு நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ்சிவனும் சென்றுள்ளனர்.

நியூயார்க்கில் இன்று முதல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் தொடக்கம்

படம்
  நியூயார்க்கில் இன்று முதல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் தொடக்கம் இன்று முதல் டென்னிஸ் போட்டி தொடக்கம்... அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, நியூயார்க் நகரில் இன்று தொடங்கவுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.

சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி

படம்
  சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி... 4 மாதங்களுக்கு பின்பு பிரசித்தி பெற்ற சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளையில் மாஸ்க் அணியாமல் வந்தால் அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளது.

லடாக்கில் அத்துமீற முயன்ற சீன ராணுவம் விரட்டியடிப்பு

படம்
  லடாக்கில் அத்துமீற முயன்ற சீன ராணுவம் விரட்டியடிப்பு சீன ராணுவத்தை விரட்டியடித்த இந்தியா... லடாக் எல்லையில் மீண்டும் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது.

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டுக்கான பரீட்சைகளை ஒத்தி வைக்க வலியுறுத்தல்

படம்
  இங்கிலாந்தில் அடுத்த ஆண்டுக்கான பரீட்சைகளை ஒத்தி வைக்க வலியுறுத்தல் பரீட்சைகளை ஒத்தி வைக்க வலியுறுத்தல்... கொரோனா வைரஸின் நெருக்கடி நிலையில் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டுக்கான A-level மற்றும் GCSE பரீட்சைகளைப் பிற்போடுமாறு தொழிற்கட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

20வது திருத்தம் அறிமுகம் செய்வதற்கு முன் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்

படம்
  20வது திருத்தம் அறிமுகம் செய்வதற்கு முன் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் பொது சொற்பொழிவு நடத்த வேண்டும்... அரசியலமைப்பின் 20 வது திருத்தம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் அதுகுறித்து தெளிவுபடுத்தி பொது சொற்பொழிவு நடத்த வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு ரூபாய் அபராதம்... இல்லாட்டி 3 மாதம் சிறை; பிரசாந்த் பூஷன் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

படம்
  ஒரு ரூபாய் அபராதம்... இல்லாட்டி 3 மாதம் சிறை; பிரசாந்த் பூஷன் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ரூ.1 அபராதம் விதித்தது. அபராதம் கட்டாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் பாதித்து பெண் இருதய நோய் நிபுணர் பலி

படம்
  கொரோனாவால் பாதித்து பெண் இருதய நோய் நிபுணர் பலி கொரோனாவால் பாதிக்கப்பட்ட 103 வயதான இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணர் டாக்டர் பத்மாவதி சிவராமகிருஷ்ணா நேற்று உயிரிழந்தார்.

அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரும் புதிய திட்டம்

படம்
  அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரும் புதிய திட்டம் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் பொருட்களை நேரடியாக பொது மக்களின் வீட்டிற்கே கொண்டுவரும் வகையிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சில மாதங்களுக்கு முன் தெரிவித்து இருந்தது. இத்திட்டத்தை கொரோனா நேரத்தில் அமல்படுத்துவது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும் என தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வகையில் அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரும் வகையிலான புதிய திட்டங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

இஸ்ரேலில் இருந்து சவுதி வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான பயணம்

படம்
  இஸ்ரேலில் இருந்து சவுதி வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான பயணம் 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான ராஜாங்கம், வர்த்தகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. ஆனால்,1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.

மொரீஷியஸ் நாட்டின் கடல்பரப்பில் ஏற்பட்ட எண்ணெய் கப்பல் விபத்தை குற்றஞ்சாட்டி பொதுமக்கள் போராட்டம்

படம்
  மொரீஷியஸ் நாட்டின் கடல்பரப்பில் ஏற்பட்ட எண்ணெய் கப்பல் விபத்தை குற்றஞ்சாட்டி பொதுமக்கள் போராட்டம் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான வகாஹியோ என்ற எண்ணெய் கப்பல் கடந்த மாதம் 25-ஆம் தேதி, இந்திய பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரீஷியஸ் அருகே பவளப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கப்பலில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரம் டன் டீசல் மற்றும் எண்ணெய் கடலில் கலந்தது.

லடாக் எல்லையில் ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி நிலைமையை மாற்ற முயற்சி

படம்
  லடாக் எல்லையில் ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி நிலைமையை மாற்ற முயற்சி லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பின் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.

அந்தமானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,081 ஆக உயர்வு

படம்
  அந்தமானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,081 ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் 70 ஆயிரத்தை கடந்துள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்வது சற்று ஆறுதலடைய செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பிற பகுதிகளைப்போல அந்தமான்-நிகோபார் தீவுக்கூட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

விமான கடத்தல் குற்றவாளிக்கு சீக்கிய அமைப்பு ‘பந்த் சேவக்’ விருது வழங்கி கவுரவிக்க முடிவு

படம்
  விமான கடத்தல் குற்றவாளிக்கு சீக்கிய அமைப்பு ‘பந்த் சேவக்’ விருது வழங்கி கவுரவிக்க முடிவு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, 1981-ம் ஆண்டு, செப்டம்பர் 29-ந் தேதி ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது, 111 பயணிகள், 6 சிப்பந்திகளுடனான அந்த விமானம், சீக்கிய அடிப்படைவாதிகளால் லாகூருக்கு கடத்தப்பட்டது. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிரம்பின் ஆதரவாளர்களும், போராட்டக்காரர்களும் இடையே மோதல்

படம்
  டிரம்பின் ஆதரவாளர்களும், போராட்டக்காரர்களும் இடையே மோதல் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் 25-ந் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினர். இதனால் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் காரணமாக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்வு

படம்
  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்வு சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 632 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

படம்
  வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் 7-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் செப்டம்பர் 1 முதல் கோயிலில் பக்தர்கள் வழிபட தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை...நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்

படம்
  பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை...நடிகை பூஜா ஹெக்டே வருத்தம் கொரோனா காரணமாக பண்டிகைகளை கொண்டாட முடியாதது வருத்தமளிப்பதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

என்னை இயக்குனராக மாற்றிய நடிகர்...நாகார்ஜுனாவுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்

படம்
  என்னை இயக்குனராக மாற்றிய நடிகர்...நாகார்ஜுனாவுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக இருந்த ராகவா லாரன்ஸ் அதன்பின் இயக்குநராக மாறினார். அவர் இயக்கிய முதல் படம் நாகார்ஜூனா நடித்த 'மாஸ்' திரைப்படமாகும். அதன்பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு...ஈரோடு மாவட்டத்தில் 34,608 மாணவர்கள் சேர்க்கை!

படம்
  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு...ஈரோடு மாவட்டத்தில் 34,608 மாணவர்கள் சேர்க்கை! தமிழ்நாடு முழுவதும் கடந்த 17-ந்தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலான நாட்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. 27-ந் தேதிவரை அரசு மற்றும் மாநகராட்சி, ஒன்றிய பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பில் 5 ஆயிரத்து 660 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். 2-ம் வகுப்பில் 408 பேர், 3-ம் வகுப்பில் 381 பேர், 4-ம் வகுப்பில் 394 பேர், 5-ம் வகுப்பில் 300 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் கொரோனாவுக்கு 13,472 பேர் சிகிச்சை...மண்டல வாரியாக தகவல்

படம்
  சென்னையில் கொரோனாவுக்கு 13,472 பேர் சிகிச்சை...மண்டல வாரியாக தகவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து பயணம்...சுவாரசியமான தகவல்!

படம்
  டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து பயணம்...சுவாரசியமான தகவல்! உலகின் மிக நீளமான பேருந்து பாதையான டெல்லி முதல் லண்டன் வரையிலான பேருந்து பாதை விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த பேருந்து 70 நாட்களில் 18 நாடுகளை கடந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆடம்பர இருக்கைகள் கொண்ட இந்த பேருந்து டெல்லியில் கிளம்பி மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் வழியாக முதல் கட்டமாக செல்லும்.  

சுரேஷ் ரெய்னா இதற்காகத்தான் ஐபிஎல்லில் இருந்து விலகினரா?...சிஎஸ்கே உரிமையாளர் தகவல்

படம்
  சுரேஷ் ரெய்னா இதற்காகத்தான் ஐபிஎல்லில் இருந்து விலகினரா?...சிஎஸ்கே உரிமையாளர் தகவல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அணி நிர்வாகத்திற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா திடீரென போட்டியில் இருந்து விலகி நாடு திரும்பினார்.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 99.85 அடியாக நீட்டிப்பு!

படம்
  பவானிசாகர் அணை நீர்மட்டம் 99.85 அடியாக நீட்டிப்பு! பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.85 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக 3,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கொரோனா வழிகாட்டு நெறிகளை பின்பற்றாத 33 மாநிலங்கள்

படம்
  கொரோனா வழிகாட்டு நெறிகளை பின்பற்றாத 33 மாநிலங்கள் பின்பற்றவில்லை... அமெரிக்காவில் 33 மாநிலங்கள் கொரோனா பரிசோதனைக்காக ட்ரம்ப் நிர்வாகம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிகக்குறைந்த செலவில் பயணம் மேற்கொள்ளும் புதிய வகை விமானம்

படம்
  மிகக்குறைந்த செலவில் பயணம் மேற்கொள்ளும் புதிய வகை விமானம் விமான வெள்ளோட்டம்... மிகக் குறைந்த செலவில் பயணம் மேற்கொள்ளும் புதிய வகை விமானத்தின் வெள்ளோட்டம் அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது.

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா தேர்வு

படம்
  நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா தேர்வு தமிழ் திரைப்பட உலகின் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா தேர்வு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மழை, வெள்ளத்தால் உள்கட்டமைப்புகள் சிதறி தவிக்கும் சீனா, பாகிஸ்தான்

படம்
  மழை, வெள்ளத்தால் உள்கட்டமைப்புகள் சிதறி தவிக்கும் சீனா, பாகிஸ்தான் சீனா மற்றும் பாகிஸ்தானில் தொடரும் கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளம் உள்கட்டமைப்புகளை சிதறடித்து வருகின்றது இயற்கையின் கோரத்தாண்டவம்.

சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் நான் கையெழுத்து போட்டிருக்க மாட்டேன் - சல்மான் குர்ஷித்

படம்
  சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் நான் கையெழுத்து போட்டிருக்க மாட்டேன் - சல்மான் குர்ஷித் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை, அமைப்பு ரீதியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என குரல் கொடுத்து மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய சம்பவம் கட்சி மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சல்மான் குர்ஷித் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து இந்திய பகுதிக்கு தோண்டப்பட்ட சுரங்கம்

படம்
  பாகிஸ்தானில் இருந்து இந்திய பகுதிக்கு தோண்டப்பட்ட சுரங்கம் சுரங்கத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர்... பாகிஸ்தானில் இருந்து இந்திய பகுதியை நோக்கி தோண்டப்பட்ட சுரங்கத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.

முதியோர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலுவான குறைதீர்ப்பு முறை அவசியம் - வெங்கையா நாயுடு

படம்
  முதியோர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலுவான குறைதீர்ப்பு முறை அவசியம் - வெங்கையா நாயுடு மூத்த குடிமக்கள், அறிவு களஞ்சியங்கள். அவர்களின் அந்திம காலத்தில், அவர்கள் பாசத்துடனும், அன்புடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும். இது இளைஞர்கள் உள்பட எல்லோருடைய புனிதமான கடமை ஆகும். நம் நாட்டில் உள்ள முதியோர் இல்லங்கள் குடும்ப பண்புகள் சீரழிந்து வருவதை பிரதிபலிக்கின்றன.

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் அபாய அளவை எட்டும் நீர்மட்டம்

படம்
  யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் அபாய அளவை எட்டும் நீர்மட்டம் நீர்மட்டம் உயர்ந்தது... டெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் நீர்மட்டம் உயர்ந்து அபாய அளவை எட்டும் நிலையில் உள்ளது.

கொரோனா திடீர் இறப்பை தடுக்கும் ஊசி மருந்து; மருத்துவர்கள் தகவல்

படம்
  கொரோனா திடீர் இறப்பை தடுக்கும் ஊசி மருந்து; மருத்துவர்கள் தகவல் கொரோனா திடீர் இறப்பை தடுக்கும் ஊசி மருந்து... Low Molecular Weight Heparin என்ற ஊசி மருந்தால், கொரோனாவால் ஏற்படும் திடீர் இறப்புகளில் 90 சதவிகிதத்தை தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கையான முறையில் ஹேர் கலரிங் செய்வது எப்படி?

படம்
  இயற்கையான முறையில் ஹேர் கலரிங் செய்வது எப்படி? ஹேர் கலரிங் செய்ய அழகு நிலையத்தில் போய் செய்தால் பணம் மற்றும் நேரம் அனைத்தும் செலவாகும். அதை விட முக்கியமான ஒன்று அதில் அதிகமாக இரசாயனப் பொருட்கள் கலந்திருக்கும். இயற்கையான முறைகளை பயன்படுத்தினால் தலைமுடி வண்ணமாக மாறுவதுடன் நேரம் மற்றும் பணம் தடுத்து தலை முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்றை நீக்க சிகிச்சை

படம்
  பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்றை நீக்க சிகிச்சை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வீட்டு குளியலறையில் மயங்கி விழுந்ததால் அவர் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மூளையில் கட்டி இருப்பதை தெரிய வந்தது. பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மூளையில் கட்டி அகற்றப்பட்டது.

மூக்குத்தி அம்மன் படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை

படம்
  மூக்குத்தி அம்மன் படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி, வைபவ் நடித்துள்ள லாக்கப் உள்ளிட்ட படங்களை இணைய தளமான ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். சூர்யாவின் சூரரை போற்று அக்டோபர் மாதம் 30-ந்தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

ஆடம்பர வாழ்க்கைக்காக மூன்று மாத குழந்தையை விற்ற தந்தை...பெங்களூரில் பரபரப்பு

படம்
  ஆடம்பர வாழ்க்கைக்காக மூன்று மாத குழந்தையை விற்ற தந்தை...பெங்களூரில் பரபரப்பு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக மூன்று மாத குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு தந்தையே விற்ற சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் புது படம் குறித்த புதிய தகவல்!

படம்
  இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் புது படம் குறித்த புதிய தகவல்! கோலிவுட் திரையுலகில் 'அட்டக்கத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித், அதன்பின் மெட்ராஸ் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். இந்த வெற்றியின் காரணமாக அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த 'காலா' திரைப்படத்திற்கு பின்னர் பா ரஞ்சித் இயக்கத்தில் அடுத்த படம் இன்னும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டிலிருந்து கர்ப்பமாக தான் இருக்கின்றேன்...ரசிகரின் கேள்விக்கு காமெடியாக பதில் கூறிய சமந்தா

படம்
  2017 ஆம் ஆண்டிலிருந்து கர்ப்பமாக தான் இருக்கின்றேன்...ரசிகரின் கேள்விக்கு காமெடியாக பதில் கூறிய சமந்தா தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா திருமணத்திற்கு பின்னரும் பல வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒருசில படங்களிலும் அவர் நடித்து வந்தார்.